50. அருள்மிகு ஆதிநாதன் கோயில்
மூலவர் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான்
தாயார் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி ஆறு
விமானம் கோவிந்த விமானம்
தல விருட்சம் புளிய மரம்
மங்களாசாசனம் நம்மாழ்வார்
இருப்பிடம் திருக்குருகூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'ஆழ்வார் திருநகரி' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் இரயில் பாதையில் உள்ள ஆழ்வார் திருநகரியிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirukurugur Tirukurugurஇந்த ஸ்தலத்தில் பகவான் பிரம்மனுக்கு குருவாக வந்து உபதேசம் செய்ததால் 'குருகூர்' என்று அழைக்கப்படுவதாகக் கூறுவர். இந்திரன் தனது பெற்றோரை உபசரிக்காமல் இருந்ததால் சாபமடைந்து, இங்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்ததாக வரலாறு.

மூலவர் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாமாகத் தோன்றிய பெரிய திருமேனி. மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். பிரம்மா, நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.

Tirukurugurதிருத்தொலைவில்லிமங்கலம் அருகிலுள்ள சௌரமங்கலம் கிராமத்தில் அவதரித்த நம்மாழ்வாரை, அவரது பெற்றோர் குருகூருக்கு அழைத்து வந்து ஆதிநாதன் ஸந்நிதியில் விட்டனர். குழந்தை தவழ்ந்துச் சென்று அங்கிருந்த புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்தது. மதுரகவி ஆழ்வார் இங்கு வந்து தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய்மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. அதனால் 'ஆழ்வார் திருநகரி' என்று பெயர் பெற்றது.

Tirukurugur Tirukurugurஆழ்வார் வீற்றிருந்த புளியமரம் உள்ளது. லக்ஷ்மணன் புளியமரமாக ஆவிர்பவிப்பதாகவும், பகவான் அங்கு பிரம்மசர்ய யோகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரம்மசரிய யோகத்தில் இருந்த பெருமாளை அடைய லக்ஷ்மி பிரார்த்திக்க, பகவான் அவரை மகிழ மாலையாக மார்பில் தரித்துக் கொண்டதாகவும் ஐதீகம்.

வைகாசி மாதம் நடைபெறும் கருடசேவையில் நவதிருப்பதிகளைச் சேர்ந்த பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாரும், மதுரகவி ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்வது விசேக்ஷமாக இருக்கும். அப்போது நம்மாழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளுவது விசேக்ஷம். மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று. நவதிருப்பதிகள் இந்த திவ்யதேசத்தைச் சுற்றியே அமைந்துள்ளன.

நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com